Sunday, July 15, 2012

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்

சாகாத்தலை ஆகாசம், வேகாக்கால் வாயு, போகாப்புனல் அக்கினி. சாகாத்தலை யென்பது ருத்திரபாகம், ருத்திர தத்துவம். வேகாக்கால் என்பது மயேசுரபாகம் மயேசுர தத்துவம். போகாப் புனல் என்பது சதாசிவபாகம் சதாசிவதத்துவம். இம்மூன்றும் சாகாக்கல்வியைத் தெரிவிக்கின்றது. ஆத்மதத்துவாதி சிவகரணம் 36-ம் நிர்மல குரு துரியாதீதம் 7-ம் சேர்ந்து ஆனநிலை 43-ல் ஒவ்வொரு நிலையிலும் இவைகளுண்டு. மேலும் சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்கிற தத்துவங்கள் பிண்டத்தில் 4 இடத்திலும், அண்டத்தில் 4 இடத்திலும் ஆக 8 இடத்திலும் உண்டு. இவைகள் பிண்டருத்திரர்கள் அண்டருத்திரர்கள் முதலிய ருத்திர மயேசுர சதாசிவ பேதமென்றறிக. சாகாக்கல்வியைக் குறித்த இந்த நாற்பத்துமூன்று நிலைகளில் முதனிலையின் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டவன் பிரமன். அவனுக்கு ஆயுசு 1 கற்பம். இப்படி 43 நிலைகளும் ஏறியனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்தவன், காலரகிதன். சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்பவற்றிற்குப் பொருள் சிலர் உப்புவகைகளின் பேதமென்று சொல்லுவது பிசகு. அவைகளினுண்மைப் பொருளை மேற்குறத்தபடி யோகக் காட்சிகளில் அனுபவிக்கலாம். ஆகையால் இவைகள் யோக அனுபவங்களே யென்று அறிய வேண்டும்.

No comments:

Post a Comment