Sunday, July 15, 2012

தேவாரம் – திருவாசகம் பெயர் விளக்கம்


தேவாரம் என்பது, தே – தயவு, ஆரம் – ஒழுங்கு ; தயா ஒழுங்கே தேவாரம்.


திருவாசகம் என்பது, மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை, மெய்ப்பொருளைத் தரும் வார்த்தை.

(திருஅருட்பா – உபதேசக் குறிப்புகள் 45, 46)

சிவம் என்பதன் பொருள்

சிவம் என்பதற்குப் பொருள் சச்சிதானந்தம்.
சச்சிதானந்த மென்பது சத்து, சித்து, ஆனந்தம். இதில் சிகரம் சத்து. வகரம் சித்து, மகரம் ஆனந்தம் ; சிகரம் எல்லாமுள்ளதாய் விளங்குவது, வகரம் எல்லாம் விளங்குவதாயுள்ளது, மகரம் இரண்டினாலும் நிரம்பிய இன்பம்.

(திருஅருட்பா – உபதேசக் குறிப்புகள் 49)

ஜோதி அகவல்( 01 - 22)

Part 1: 

Part 2: 

Part 3:
   
Part 4:

 Part 5:

 Part 6: 

 Part 7: 

 Part 8: 

Part 9: 

Part 10:

Part 11:

Part 12:

Part 13:

Part 14:

Part 15:

Part 16:

Part 17:
Part 18:
Part 19:
Part 20:
Part 21:

Part 22:

ஜீவகாருணியமும் சித்தியும்

நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையில் அடைவது அரிது. இவ்வன்பு ஜீவகாருண்யத்தா லல்லது ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருணிய முண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில் கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே. அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவகாருணியம். இது தான் முத்தியடைவதற்கும் சித்தியடைவதற்கும் முதற்படியாய் இருக்கின்றது. ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.

சிவ சிந்தனை

ஓம் சிவாயநம என்று சதா சிந்தித்துக் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வுலகம் அருட்சத்தி, பொருட்சத்தி, கிரியாசத்தி, யோகசத்தி, ஞானசத்தி மயமாக இருப்பதாகப் பார்த்துக்கொண்டிருத்தல் வேண்டும். யோகம் செய்ய வேண்டுவதில்லை. அதில் அழுந்தி விட்டால் மீளுவது கஷ்டம். சதா சிவக்கலப்பாய்க் கிடந்தாலும் மீளுதல் அருமை, மூடம் உண்டாக்கும். உண்மை.

ஓம் என்னும் எழுத்து பிரணவம் என்று சொல்லப்படும். படைத்தளித் தழிக்க வல்ல தலைவன் என்பதே அந்த ஓங்காரத்தின் பொருள்.

பிரணவம்

பிரணவத்தின் ஐந்து பாகம் யாவெனில் அகரம், உகரம், மகரம், விந்து, நாதம். பஞ்சமி என்னும் வாக்கு பிரணவத்தின்கண் இருந்து தோன்றியது. அதற்கு ஸ்தானம் மூலாதாரம். அதிலிருந்து தோன்றிய மற்ற நான்கும் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி. இவற்றிற்கு இடம் நாபி, இருதயம், கண்டம் லலாடம்.

விருப்பு வெறுப்பு

விருப்பு வெறுப்பு என்பதற்குப் பொருள்:

விருப்பென்பது யாது?

ஒன்றை வேண்டிப் பந்தப்பட்டு, பூரண லக்ஷியத்தை விட்டு, அதிசயமாகப் பார்த்து நிற்றல். இந்த விருப்பால் தானுங் கெட்டு, இதர வஸ்துவுங் கெட்டு, சாதனமுந் தடைப்பட்டுவிடும். எவ்வகையிலும் விருப்பென்பது கூடாது.

வெறுப்பென்பது யாது?

வேண்டாமை, துவேஷம், இதர வஸ்துவைப் பற்றாதிருத்தல். இந்த வெறுப்பால் இதரவஸ்துவிடத்தில் துவேஷந் தோன்றி ஜீவோபகாரத்தைத் தடை செய்யும். ஆகையால் வெறுப்புங் கூடாது. மேற்குறித்த இரண்டுமற்று, சத்துவமயமாய் நிற்றல் வேண்டும்.

சன்மார்க்க சங்கம்

சமரச வேத சன்மார்க்க சங்க மென்பதற்குப் பொருள்:

எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலின் முடிவான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க.
மார்க்கம் நான்காவன:
தாச மார்க்கம், சத்புத்திர மார்க்கம், மித்திர மார்க்ம், சன் மார்க்கம்.

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்

சாகாத்தலை ஆகாசம், வேகாக்கால் வாயு, போகாப்புனல் அக்கினி. சாகாத்தலை யென்பது ருத்திரபாகம், ருத்திர தத்துவம். வேகாக்கால் என்பது மயேசுரபாகம் மயேசுர தத்துவம். போகாப் புனல் என்பது சதாசிவபாகம் சதாசிவதத்துவம். இம்மூன்றும் சாகாக்கல்வியைத் தெரிவிக்கின்றது. ஆத்மதத்துவாதி சிவகரணம் 36-ம் நிர்மல குரு துரியாதீதம் 7-ம் சேர்ந்து ஆனநிலை 43-ல் ஒவ்வொரு நிலையிலும் இவைகளுண்டு. மேலும் சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்கிற தத்துவங்கள் பிண்டத்தில் 4 இடத்திலும், அண்டத்தில் 4 இடத்திலும் ஆக 8 இடத்திலும் உண்டு. இவைகள் பிண்டருத்திரர்கள் அண்டருத்திரர்கள் முதலிய ருத்திர மயேசுர சதாசிவ பேதமென்றறிக. சாகாக்கல்வியைக் குறித்த இந்த நாற்பத்துமூன்று நிலைகளில் முதனிலையின் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டவன் பிரமன். அவனுக்கு ஆயுசு 1 கற்பம். இப்படி 43 நிலைகளும் ஏறியனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்தவன், காலரகிதன். சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்பவற்றிற்குப் பொருள் சிலர் உப்புவகைகளின் பேதமென்று சொல்லுவது பிசகு. அவைகளினுண்மைப் பொருளை மேற்குறத்தபடி யோகக் காட்சிகளில் அனுபவிக்கலாம். ஆகையால் இவைகள் யோக அனுபவங்களே யென்று அறிய வேண்டும்.

பரசிவ நிலை



அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.


ஆன்மாவும் ஏழு திரைகளும்

இந்தப் பவுதிக உடம்பிலிருக்கின்ற நீ யாரெனில்: நான் ஆன்மா, சிற்றணு வடிவினன். மேற்படி அணு கோடி சூரியப் பிரகாசமுடையது, லலாடஸ்தான மிருப்பிடம், கால்பங்கு பொன்மை முக்கால்பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தைமறைக்க மாயா சத்திகளாகிய ஏழு திரைகளுண்டு. அவையாவன:

1கறுப்புத் திரைமாயாசத்தி அசுத்த மாயாசத்தி
2நீலத்திரைசுத்தாசுத்த மாயாசத்தி
3பச்சைத்திரைகிரியாசத்தி
4சிவப்புத்திரைபராசத்தி
5பொன்மைத்திரைஇச்சாசத்தி
6வெண்மைத்திரைஞானசத்தி
7கலப்புத்திரைஆதிசத்தி

Saturday, July 14, 2012

மனு முறை கண்ட வாசகம் - நல்லோர் மனத்தை



நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
மாதா பிதாவை வைது நின்றேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வதை இகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!







வான் கலந்த மாணிக்க வாசகா


வான் கலந்த மாணிக்க வாசகா! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!

வள்ளலார் பற்றி தமிழில்


மரணமிலா பெருவாழ்வு

ஆறாம் திருமுறை
134 மரணமிலாப் பெருவாழ்வு

5601

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே
 - 26